டக்ளஸை சந்தித்த செல்வம்?

 


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம்

அடைக்கலநாதன்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்து பேசியுள்ளார்.

கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாக டக்ளஸ் தெரிவித்துள்ளார்.


ஏற்கனவே புதிய அரசின் அமைச்சர்கள் வடக்கிற்கு வருகை தருகின்ற போதெல்லாம் தவறாது செல்வம் அடைக்கலநாதன் அடைக்கலமாகிவருகின்றார்.

இந்நிலையில் தற்போது அமைச்சர்களது அலுவலகங்களிற்கு அவர் படையெடுக்க தொடங்கியுள்ளார்.


No comments