துப்பாக்கி தயாரித்த முன்னாள் போராளி உட்பட மூவர் கைது!


அம்பாறை திருக்கோவில் பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரித்த மூவரை தேசிய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதுடன் 10 துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கடைச்சல் பட்டறை நிலையத்தில் (லேத் மெசின்) சோதனைகளை மேற்கொண்ட போது அங்கு உள்ளூர் வேட்டைத் துப்பாக்கிகளைத் தயாரித்த குற்றச்சாட்டில் பட்டறையில் வேலை செய்யத 60 வயதுடைய தம்விலுவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

இதேநேரம் குறித்த துப்பாக்கிகளுக்கு அணைப்புப் பிடி (பட்) தயாரித்த 40 வயதுடைய மரவேலைத் தொழிலாளியும் முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிளைத் விற்பனை செய்த காஞ்சரம்குடாவைச் சேர்ந்த மற்றாெருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

No comments