இடமாற்றத்தை அமுல்படுத்த கோரிக்கை!வடமாகாண சுhகாதார சாரதிகளின் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வடமாகாண அரச சாரதிகள் சங்கத்தினர் இன்று (12) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்ற முன்னெடுத்துள்ளனர்.


இதனை வலியுறுத்தி இன்று மாகாணம் தழுவிய சுகயீன விடுமுறை போராட்டத்தில் இந்த சாரதிகள் சங்கம் ஈடுபட்டுள்ள நிலையிலேயே ஆளுநர் அலுவலகம் முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.


இதன்போது ஆளுநரின் செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். இதற்கு வடமாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கம், அகில இலங்கை நிர்வாக உத்தியோகத்தர் சங்கத்தின் வட பிராந்திய கிளை ஆகியனவும் ஆதரவு வழங்கி மகஜரை கையளித்தன.


இதேவேளை வடமாகாண அரச சாரதிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு தாமும் ஆதரவு தெரிவிப்பதாக கிழக்கு மாகாண அரச சாரதிகள் சங்கத்தின் செயலாளர் எம்மிடம் நேற்று (11) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


முன்னதாக வடமாகாண சுகாதார சாரதிகளில் அம்புலன்ஸ் சேவையினர் தமது இடமாற்றத்துக்கு எதிராக அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


No comments