மாலை தேடும் செல்வம் அடைக்கலநாதன்?


தேர்தல் கூட்டில் ஒருவாறாக வென்றிருந்த செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் ஆட்சியாளர்களுடன் நட்புறை பேண மும்முரமாகியுள்ளார்.

அதனால் எந்த அமைச்சர் பங்கெடுக்கும் நிகழ்வாயினும் முன்னால் சென்று தலை காட்டுவதை செல்வம் தனது தொழிலாக்கியுள்ளார்.

திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிரான உண்ணாவிரதத்தை எட்டிப்பார்க்க மறுத்த செல்வம் யாழுக்கு அமைச்சர் ஹெகலிய வருகை தந்த போது ஓடோடி வந்து குந்தியிருந்த பரிதாபம் நடந்தது.   


இதனிடையே இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் கலந்துரையாடல் நாளை (4) கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

வடக்கு கிழக்கிலுள்ள வாலிபர் முன்னணி பிரமுகர்கள் நாளை ஒன்றுகூடுகிறார்கள். வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தேர்தல் தோல்வியினையடுத்து முனைப்படைந்துள்ள இளைஞரணி தற்போது சுமந்திரனற்ற தமிழரசு முயற்சியை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments