இணைய ஊடகங்கள் பிரச்சினையாம்?


சிங்கள அமைச்சர்கள் தமிழ் மக்களிற்கு எதனையும் கொண்டுவராத போதும் தமிழ் ஊடகங்கள் ஆகக்குறைந்தது அவர்களது வாயை கிண்டி இனவாதத்தை அம்பலப்படுத்துவது வழமையாகும்.

குறிப்பாக திலீபனின் நினைவேந்தல் தடை போன்ற விடயங்களை கிண்டி அரசினது இனவாத போக்கு மற்றும் அங்கயன்,வியாழேந்திரனது போலி தேசியத்தை அம்பலப்படுத்தியிருந்தனர்.

ஆனாலும் இவை பற்றி ஏதும் புரியாது சிலர் இலங்கையில் பதிவு செய்யாத ஊடகங்கள்,சமூக ஊடகங்கள் பற்றி நீதி கேட்கப்போய் மூக்குடைபட்ட பரிதாபமும் நடந்திருந்தது.

இலங்கை ஜனாதிபதியே இணைய ஊடகங்களை கட்டுப்படுத்த தன்னிடம் வழியில்லையென்கிறார்.என்னால் என்ன செய்யமுடியுமென பரிதாபகரமாக கேள்வி எழுப்பினார் ஊடக அமைச்சர் ஹெகலிய.

தூதுவராலயங்களில் மண்டியிட்டும் காட்டிக்கொடுத்தும் கல்லா கட்டும் போலிகள் தற்போது இணைய ஊடகங்களை கட்டுப்படுத்த இலங்கை அரசிடம் போட்டுக்கொடுக்க போய் மூக்குடைபட்டதே தற்போதைய சாதனை என்கிறனர் சகபாடிகள்,


No comments