கெஹலிய ரம்புக்வெல்ல:விசாரணைக்கு உத்தரவு


முல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் சட்டவிரோத மரக்கடத்தல்காரர்களினால் தாக்கப்பட்டமை குறித்து அறிக்கை ஒன்றை அரசாங்கம் கோரியிருப்பதோடு பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றை நடத்தும்படியும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments