இன்று 609?


கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக இன்று (23) இதுவரை 609 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தை தொடர்பால் 496 பேருக்கும் மினுவாங்கொடை தொடர்பு காரணமாக பல்வேறு இடங்களில் 40 பேர், தனிமைப்படுத்தல் மையத்தில் 48 என 88 பேருக்கும், பேருவளை துறைமுகத்தில் 20 பேருக்கும் 5 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதியானது.

இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3,426 ஆக உயர்ந்துள்ளது.

No comments