யாழில் இன்றும் பேருக்கு கொரோனா?இலங்கை இராணுவத்தின் இயக்கச்சி தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தென்னிலங்கையின் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள், குடும்பத்தினர் என ஒரு தொகுதியினர் இயக்கச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிற்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 285 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 9 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறுவருக்கு நேற்றைய ஆய்வின் போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாக பணிப்பாளர் த.சத்தியமூர்ததி தெரிவித்திருந்தார்.

எனினும் வடக்கில் இன்று மன்னார் உள்ளிட்ட வேறு பகுதிகளில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை.


No comments