அரச அலுவலகங்களும் முடக்கம்?


குருநகர் பகுதியில் அமைந்துள்ள அரச அலுவலகங்களது செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

வடமாகாணசபையின் கட்டடங்கள் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் என்பவை குருநகர் பகுதியில் இயங்கிவருகின்றது.இந்நிலையில் அவ்வலுவலக செயற்பாடுகளையும் முடக்குவது பற்றி ஆராயப்பட்டுவருகின்றது.

இதனிடையே இருவருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்,  குறித்த நபர்களுடன் ஏற்கெனவே தொடர்புகளை பேணிய சந்தை வியாபாரிகள் உட்பட 36 பேருக்கு நாளைய தினம் (28) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக, யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments