முரளிக்கு விஜய்சேதுபதி படம்:இருவர் ஆமியில் இணைவு?


 இலங்கை கிரிக்கெட் இராணுவமயமாகிவருகின்ற நிலையில் முத்தையா முரளிதரன் பற்றி தமிழகத்தில் படமெடுக்கப்படவுள்ளது.படத்தின் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இரு சிங்கள கிரிக்கெட் வீரர்கள் இனஅழிப்பு இராணுவத்திற்கு வெள்ளையடிக்க அதில் இணைந்து பதவி பெற்றுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசார பெரேரா ஆகியோர் தன்னார்வ படையின் இராணுவ மேஜர்களாக இன்று (09) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னணி வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசார பெரேரா ஆகியோர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வாவினால் இன்றைய தினம் இவ்வாறு நியமிக்கப்பட்டனர்.

No comments