பரீட்சைகள் ஆரம்பம்?


இலங்கை முழுவதும் கொரொனா தாண்டி மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர்.

வடக்கில் யாழ்ப்பாணத்தின் தீவத்திலும் மன்னார் மாவட்டத்திலும் கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இன்றைய தினம் (11) ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர்.

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை. 9.30 மணிக்கு பரிட்சை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் 8மணி முதல்  பரீட்சை மண்டபத்திற்கு சென்றுள்ளனர்.

குறிப்பாக மாணவர்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக முகக்கவசம் அணிந்து பாடசாலைக்குச் சென்றுள்ளனர். மாணவர்களுடன் பெற்றோரும் பாடசாலையின் நுழைவாயில் வரை சென்றுள்ளனர்.

எனினும் பெற்றோர் பாடசாலை நுழை வாயில் வரை மாத்திரமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாணவர்களின் உடல் வெப்ப நிலை அளவீடு செய்யப்பட்டு கை சுத்தம் செய்யப்பட்ட பின்னரே பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.


No comments