கிளிநொச்சியில் இன்றும் புகையிரத விபத்து?கிளிநொச்சியில் புகையிரத விபத்து நாளாந்தம் நடப்பது சாதாரணமாகியுள்ளது.

இன்றைய தினமும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணம் செய்த புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

ஊயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத போதும் விபத்தினாலா அல்லது தற்கொலையாலா மரணம் சம்பவித்ததென்ற தகவல் வெளியாகவுள்ளது.


No comments