காணாமல் போன மகனைத் தேடிய தாய் மரணம்


வவுனியா மகறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மனோன்மணி வயது 70 என்ற தாயே இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.

இவரது மகன் பெரியசாமி செல்வகுமார் வயது 45 கடந்த  2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

அவரைத்தேடி வவுனியாவில் 1328 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடிய நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமது பிள்ளைகளைத் தேடிய இரு தந்தைமார் வவுனியாவில் அண்மையில் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments