6 பேருக்கு மேல் கூடினால் அபராதம் மற்றும் கைது - பொறிஸ்


இங்கிலாந்தில் கொரோனா தொற்று நோய் அதிகரித்து வருவதனால் மற்றுமொரு முடக்கநிலையைத் தவிர்ப்பதற்கு நாங்கள் செயற்படவேண்டும் என பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

புதிய கட்டுப்பாட்டு விதிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளார்.

6 பேருக்கு மேல் பொது இடங்களில் ஒன்றுகூட முடியாது. அவ்வாறு ஒன்று கூடினால் அபராதம் மற்றும் கைது செய்யவும் முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், பள்ளிகள், அலுவலகங்கள் கொரோனா பாதுகாப்புடன் நடக்கும் திருமண நிகழ்ச்சிகள், இறுதிச்சடங்குகள் போன்றவற்றிற்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றார்.

நான் முற்றிலும் தெளிவாக இருக்க விரும்புகிறேன். இது முடக்கநிலையல்ல. நாடு பூராகவும் இரண்டாவது தேசிய பூட்டுதலைத் தவிர்ப்பதுதான் நோக்கம் என்றார்.

இவ்வாறு கட்டுப்பாடுகளை வலியுறுத்த வேண்டியது என் இதயத்தை உடைக்கிறது என அவர் கூறினார்.

No comments