ஊடகவியலாளர்கள் கொழும்பில் மர்மமாக மரணம்?

கொழும்பின் மர்மமான முறையில் ஊடகிவயலாளர்கள் மரணித்து வருகின்ற நிலையில் புறநகர்ப்பகுதியான பெலவத்தையில் உள்ள இல்லத்தில்

தனித்து வாழ்ந்துவந்த 60 வயதுடைய ஜக்கி ஜப்பார் எனும் ஊடகவியலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜலண்ட் பத்திரிகையில் பணியாற்றி வந்திருந்த அவர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பணிக்கு சமூகமளித்திருக்கவில்லை என அவரோடு பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.


உயிரிழந்தமைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரியாத போதும் அவர் இறந்து பல நாட்களாகியிருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மற்றொரு முன்னணி பத்தி எழுத்தாளர் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

கோத்தபாயவினால் முன்னெடுக்கப்பட்ட விமான கொள்வனவு ஊழலை அவர் அம்பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


.


No comments