கடலாமை இறைச்சி! குருநகரில் நால்வர் கைது!


இலங்கையில் தடை செய்யப்பட்ட கடலாமை இறைச்சியை விற்பனை செய்ய தயாராக வைத்திருந்தபோது நால்வர் சிறீலங்கா விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிரடைப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடு யாழ்ப்பாணம் – குருநகர் அண்ணாசிலை பகுதியில் வீடு ஒன்றினைச் சோதனையிட்ட போது, வெட்டப்பட்ட கடலாமை இறைச்சிகள் விற்பனைக்குத் தயாரான நிலையில் நால்வர் இருந்துள்ளனர். அந்த வீட்டில் இருந்த குருநகர் பகுதியை சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments