திருகோணமலைக்கு வந்த இந்தியக் கப்பலில் 17 பேருக்கு கொரோனா


திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை தந்த கப்பலொன்றில் 17 இந்தியக் குடிமக்களுக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு கப்பல் எரிபொருளை கொண்டு செல்வதற்காக வருகை தந்துள்ளது.

தற்போது கப்பலில் வருகை தந்த ஊழியர்கள் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளான 17 இந்தியக் குடிமக்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகிறது.

No comments