திருகோணமலையில் விபத்து! ஓட்டுநர் பலி!


திருகோணமலை பிரதான வீதியில் நேற்றிரவு மகிழுந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியுடன் மோதியது. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் திருகோணமலை - சோனக வாடி, மூர் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய நடராசா அனுஷாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த முக்சக்கரவண்டி ஓட்டுநர் திருகோணமலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிற்சைகள் அளிக்கப்பட்ட போதும் சிகிற்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இதேநேரம் மகிழுந்து ஒட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யபட்டுள்ளார். அத்துடன் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.


No comments