497 டெட்டனேட்டர் குச்சிகளுடன் ஒருவர் கைது!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோவிலடி பிரதேசத்தில் இன்று காலை சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற முச்சக்கரவண்டியை சோதனை மேற்கொண்டதில் முச்சக்கரவண்டியில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட 497 டெட்டனேட்டர் குச்சிகளை கைப்பற்றியதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல் பிரதேசத்தில் இருந்து கிண்ணியா பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக கிண்ணியா பிரதேச மீனவர்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட டெட்டனேட்டர் குச்சிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக தம்பலகமம் பொலிஸார் தெரிவித்தனர். 

டெட்டனேட்டர் குச்சிகளை சட்டவிரோதமாக ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில்  54 வயதுடையர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

கைப்பற்றப்பட்ட டெட்டனேட்டர் குச்சிகளின் சந்தைப்பெறுமதி சுமார் 50,000 ரூபா, எனவும் 100,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவிருந்ததாக சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட டெட்டனேட்டர் குச்சிகளையும் கந்தலாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக தம்பலகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


No comments