வெடுக்குநாறி மலை: விடாது துரத்தும் இனவாதம்?

 

வெடுக்குநாறிமலை ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் முதலாம் நாள் வழிபாடுகள் நேற்றையதினம் விமர்சையாக இடம்பெற்றிருந்த போதும்  இராணுவப்புலனாய்வாளர்கள் இடையிடையே ஆலயத்திற்கு வருகைதருவதும் செல்வதுமாக காணப்பட்டதாக பக்தர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

நேற்றிரவு நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி தனது குழுவினருடன் திடீர் விஜயமாக வருகைதந்து ஆலயச்சூழலை கண்காணித்துவிட்டுச்சென்றுள்ளார். ஒலிபெருக்கி சாதனம் பயன்படுத்த நெடுங்கேணிப்பொலிசார் வேண்டுமென்றே தடைவிதித்துள்ளார்கள்.பொலிசாரின் கடும் கண்காணிப்புடன் கூடிய பிரசன்னத்தால் பக்தர்களின் வரவு இன்று சடுதியாக குறைந்து காணப்பட்டது. குறிப்பிட்டளவு கிராம மக்களுடன் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இளைஞர் குழுவும் வவுனியாவிலிருந்து ஒரு இளைஞர்குழுவும் ஆலயத்திற்கு வருகை தந்தார்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டது.

உற்சவத்தின் ஆரம்பநாளின் பாரம்பரிய நிகழ்வுகளான சூலம் எடுத்தல் விளக்குவைத்தல், உச்சிமலை ஆதிலிங்கேஸ்வரர் தரிசனம் ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

26ம் திகதி சனிக்கிழமை உற்சவத்தின் இறுதிநாளில் 108 பானைகளில் பொங்கிப்படைக்கும் வழிபாட்டு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments