யேர்மனியில் திலீபன் நினைவேந்தல் 11 ஆம் நாள்

உண்ணா நோன்பிருந்து உயிர்நீர்த்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 11 ஆவது நாள் இன்று யேர்மனியிலுள்ள எசன் நகரில் நினைவுகூரப்பட்டது.

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்கள் இந்திய வல்லாதிக்கத்திடம் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து. நீர் கூட அருந்தாது உண்ணா நோன்பை ஆரம்பித்த புரட்டாதி மாதம் 15 ஆம் திகதியில் இருந்து தொடர்ச்சியாக யேர்மனியின் பல நகரங்களில் நினைவுகூரப்படுகின்றது. அந்த வகையிலே 11வது நாளான இன்று எசன் நகரத்தில் நினைவு கூரப்பட்டது.

இந்நிகழ்வுக்கு அருட்தந்தை அல்பேட் கோலன்,இடது சாரிக்கட்சியின் எசன் நகரத்தின் பிரதிநிதிகளில் ஒருவரான டெவ்ரான் அவர்களும் மற்றும் குர்திஸ்தான் மக்கள் சார்பாக ஜில்மஸ் அவர்களும் வருகை தந்து உரையாற்றியிருந்தார்கள். ஈழத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவு கூரலுக்கு

சிங்கள பெளத்த பேரினவாதம் தடை விதித்ததை வன்மையாக கண்டித்தார்கள்.

கோவிட்19 நோய்த்தாகம் இடம்பெறும் காலத்திலும் அதிகளவான மக்கள் வாய் மூக்கு கவசம் அணிந்து சமூக இடைவெளிக் கடைப்பிடித்து தியாகதீபத்திற்கு மலர் தூவி சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார்கள்.

12வது நாளான நாளையதினம் யேர்மனி பேலின் நகரத்தில் Brandenburger Tor ற்கு முன்பாக நடைபெறவிருக்கின்றது. அந்த நகரத்தில் வாழும் தமிழ் மக்களை தியாகதீபத்திற்கு மலர்துர்வி சுடர் ஏற்ற அழைக்கின்றோம்.

No comments