தூத்துக்குடியில் மீண்டும் காவல்துறை அத்துமீறல்! நாம்தமிழர் நிர்வாகி கொலைக்கு உடந்தை!


தூத்துக்குடி மாவட்டம் சொக்கன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் செல்வன் காரில் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உடந்தை என்று கூறி அவரை கைது செய்ய சொக்கன் குடியிருப்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.  

காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திருமணவேல்  உட்படக் கொலைக்குத் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும் வரை செல்வனின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதுபோன்று தங்களது கட்சி நிர்வாகியான செல்வன் கொலைக்கு தொடர்புடையர்களை கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர்.

செல்வன் கொலை  விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

No comments