திலீபன் வளைவு!! என்ன சொல்கிறார் பார்த்தீபன்?


நான் உயிரிலும் மேலாக நேசிக்கும் உங்களிடம் ஒரு பெரும் பெறுப்பை விட்டுச் செல்கின்றேன் நீங்கள் அனைவரும் பரிபூரணமாக கிளர்ந்தெழவேண்டும். இது தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நாவில் உதிர்ந்த வார்த்தைகள். ஆனால் ஒரு சிலர் கிளந்தெழுகின்ற விடயங்களைப் பார்க்கும் மனம் வேதனை அளிக்கின்றது.

திலீபன் அண்ணாவின் நினைவாலயத்தில் காணப்பட்ட வளைவு தூக்கி எறியப்பட்டு புது வளைவு போடப்பட்டது என்ற செய்திகளுடன் கிளர்ந்தெழுகின்றவர்களின் பதிவுகள் ஏற்புடையதாக எனக்கு தெரியவில்லை.

இதற்கு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டிய தேவையும் எனக்கு இருக்கின்றது. 2018 ஆம் ஆண்டு நல்லூர் திருவிழா காலத்தில் திலீபன் அண்ணாவின் நினைவாலயத்தில் போடப்பட்ட பாதுகாப்பு வேலியினைத் தொடந்து அவ் வருடம் நிடைபெற்ற நினைவேந்தலில் குறித்த வளைவு முதல் முதலில் போடப்படட்டது.

பின்னர் 2019 ஆம் ஆண்டு அவ் வளைவில் காணப்பட்ட பதாகை (பனம்) சூரிய ஒளி பட்டு மங்கியதன் காரணமாக வேறு பதாகை அமைக்கப்பட்டது.

அதே நடைமுறை தான் 2020 ஆம் ஆண்டும் பின்பற்றப்பட்டது

வளைவு அமைக்கப்பட்ட முதல் ஆண்டு முதல் இவ்வாண்டு வரையான கடந்த மூன்று ஆண்டுகளும் குறித்த பாதகைகளை வடிவமைத்தவன் என்ற பெறுப்புடன் கூறுகின்றேன். எந்த ஒரு வளைவும் கழட்டி வீசப்படவில்லை. அதே வளைவில் அதன் வடிவமைப்பு தான் மாற்றி அமைக்கப்பட்டது. வழமையாக அவ் நினைவாலயத்தில் பின்பற்றுகின்ற நடைமுறையே இம் முறையும் பின்பற்றப்பட்டது. 

காலத்திற்கு காலம் அவ் நினைவாலயத்தினை அழகுபடுத்த வேண்டிய, புனரமைக்க வேண்டிய தேவையுடன் கூடிய உரிமை இந்த இனத்தில் பிறந்த அனைவருக்கும் உண்டு. அதன் நீட்சியே குறித்த வளைவின் மேல் பகுதி வளைவு என்ற எண்ணக்கருவிற்கு ஏற்ப வளைவு போல் மாற்றியமைக்கப்பட்டது. 

இம்முறை முதல் இருந்த வளைவு தூக்கிய எறியப்பட்டு புது வளைவு போடப்பட்டது என்று பதிவிடுபவர்கள் 2019 ஆம் ஆண்டும் அவ் வளைவு புதுப்பிக்கப்பட்டது அப்போது இதே கருத்தைப் பதிவிட்டு இருக்க வேண்டும் அதனை ஏன் அன்று நீங்கள் செய்யவில்லை என்பதற்கான விடையை நீங்களே உங்கைளப் சுய பரிசோதனை செய்து பெற்றுக் கொள்ளுங்கள். 

ஒரு கட்சியிடம் அனுமதி பெறப்பட்டதா என்றும் கருத்துரைக்கப்பட்டது. நான் அக் கட்சி சார்பானவனாக இருப்பினும் திலீபன் அண்ணாவின் நினைவாலயம் ஒரு கட்சி சார்ந்ததோ அல்லது ஒரு தனிநபர் சார்ந்ததோ அல்ல. அது தமிழ்மக்கள் அனைவரினதும் ஆத்மார்த்தமான கோவில். 

2018 ஆம் ஆண்டு க்கு முன்னையகாலத்தில் அவ் நினைவாலயத்தில் நினைவு காலத்தில் மட்டும் அதனை துப்பரவு செய்து படம் வைத்து அலங்கரித்து நினைவு தினத்தை அனுஸ்டித்து விட்டு மீண்டும் படத்தையும் அலங்காரங்களையும் கழட்டிச் செல்லுகின்ற வழமையே காணப்பட்டது. அது ஏற்புடையது அல்ல என்பதன் அடிப்படையில் 2018 ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிரந்தரமாகவே படம் வைக்கப்பட்டு அங்கு சில புனிதத்தை பேணுகின்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. 

https://www.facebook.com/photo.php?fbid=2349860485255422&set=a.1390706841170796&type=3&theater

அத்துடன் அவ் நினைவாலயத்தின் வரலாறு சுருக்கமாக மூன்று மொழிகளில் போடப்பட்டது. இதனை நான் யாரிடமும் அனுமதி பெற்றுசெய்யவோ அல்லது கேட்டோ செய்யவில்லை. என் மனம் கூறியதை செய்தேன் நான் சார்ந்த கட்சியினருக்கு கூட இது தெரியாது. குறித்த விடயம் முகப்பு பக்கத்தில் வெளிவந்த பின்னரே அனைவருக்கும் தெரியவந்தது. அனைப்பார்த்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட சட்டத்தரணி மணிவண்ணன் ' திலீபன் அண்ணாவின் இராணுவ பதவிநிலையுடன் நீங்கள் பனர் அடித்து போட்டு இருக்கின்றீர்கள் கட்டாயம அது பிரச்சனை வரும் உடனடியாக அதை மாற்றுங்கள் என்று கூறினார். அவர் கூறியது போலவே இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் பொலிசாரினால் குறித்த பனர்கள் மட்டும் அகற்றப்பட்டன. மீண்டும் பதவி நிலை இல்லாத பனர்கள் நினைவாலயத்தில் இடப்பட்டன

குறித்த நிகழ்ச்சிகளுக்கான சான்றுகளாக....

https://www.facebook.com/photo.php?fbid=2341579346083536&set=pcb.2341583839416420&type=3&__tn__=HH-R&eid=ARBD_G-NOEfX0VDLITgUR3uXKhfrEVrk5FFwDc4zpmyvrTmTpUu8X2MBq4ZANvby8TTTljk_Et_XIL4J

கடந்த இரண்டு வருடகால நினைவேந்தல் நாட்களில் அதற்கு பின்னரான நாட்களில் திலீபன் நினைவாலயத்திற்காக பூங்கன்றுகள் வாங்கித்தாருங்கள், நிறபூச்சு வாங்கி தாருங்கள் பூஞ்சாடிகள் வாங்கித்தாருங்கள் என்று கேட்டும் தாங்களாக முன்வந்து தந்ததும் பெற்றுக் கொண்டுதான் திலீபன் அண்ணாவின் நினைவாலயம் மெருகூட்டப்பட்டது. 

கடந்த வருடம் வீதியால் என்ற ஒருவர் நானும் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் நான் இவ் நினைவாலயத்தினை மின்விளக்குகளால் அலங்கரித்து தரவா அதற்குரிய செலவினை நானே செலவு செய்கின்றேன் என்று கூறி செய்த சம்பவமும் உண்டு. 

https://www.facebook.com/photo.php?fbid=2581712985403503&set=pcb.2581713238736811&type=3&__tn__=HH-R&eid=ARD8-ZKgW8rpVwz8XQsIBLWLeyomQT2jXJYVjFrg8pzBi7jsMJEebZSl0wxfvraSSIXlZwEgOgIIxTAr

இவ்வாறு விடயங்களைக் குறிப்பிட்டுக் கொண்டே செல்லாம்

கடந்த வருடம் வேறு ஒரு அமைப்பு நினைவேந்தல் காலப்பகுதியில் மிகப்பெரிய கட்டவுட் ஒன்றினை வைக்கபோகின்றோம் வைக்கலாம் தானே என்று கேட்டார்கள். அபோது அவர்களுக்கு நான் கூறியது இது என்னுடையதோ அல்லது யாருடையதோ அல்ல தமிழ்மக்களுடையது. தமிழ்மக்களது ஆத்மார்த்தமாக விளங்குகின்ற இக் கோயிலின் புனிதம் கெடாத வகையில் அதனை மெருகூற்றும் வகையில் யாரும் எதுவும் செய்யலாம். எனறேன். அவர்களும் அதனை அமைத்துக் கொண்டார்கள்.

70,000 ஆயிரம் ரூபா பெறுமதியான வளைவு கழட்டி எறியப்படட்தாகவும் பதிவிடுகின்றீர்கள். அதன் தாற்பரியம் உண்மை எனக்கு விளங்கவே இல்லை. 

இவ்வாறான கற்பனை வளமிக்க கருத்துக்களை பதிவிட்டு உங்களை நீங்களே சிறுமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். குறித்த வளைவு நான்கு பகுதிகளைக் கொண்டது ஒவ்வொரு பகுதியும் 10 அடி உயரத்தையும் 2 இரண்டு அடி அகலத்தையும் கொண்டுள்ளது ஆக ஒரு பகுதிகளும் 20 சதுர அடிகளாக மொத்தம் 80 சதுர அடிகளைக் கொண்டுள்ளது எனக்கு தெரிந்து ஒரு சதுர அடிக்கு 200 ரூபாக்கள் முடியும் ஆக 16,000 ரூபாதான் அதன் பெறுமதியாக இருக்கும் என்றே நினைக்கின்றேன்.

16,000 ரூபா பெறுமதியான அந்த வளைவில் ஒவ்வொரு வருடமும் அவ் வளைவில் உள்ள அதன் பதாகை மட்டும் மாற்றப்பட:டு வருகின்றது அதற்கான செலவ பதாகைக்குரிய (பனர்) செலவு மாத்திரமே ஏறத்தாழ 5000 ரூபா ஆகவே காணப்படும். அவ் வழமையான நடைமுறையை இம் முறையும் பின்பற்றியது தவறா?

குறித்த பெறுமதியான வளைவும் கழட்டி எறியப்படவில்லை வழமைபோல் கழட்டி புனரமைத்து வழமைபோல் பூட்டப்பட்டுள்ளது அதன் மேல்பகுதி மட்டும் மாற்றப்பட்டது. 

முதல் இருந்த வளைவு கழட்டி எறியப்பட்டது என்று கிளார்தெழுந்து பதிவிடுபவர்கள். 2019 ஆண்டும் வளைவு கழட்டி எறியப்பட்டது ஏன் என்றும் பதவிட்டிடு இருக்க வேண்டும். ஏன் என்றால் இரண்டும் ஒரே தன்மை வாய்ந்தது. அதே நேரம் இன்னொன்றையும் பதிவிட்டிருக்க வேண்டும். அதையும் மறந்திருந்தால் உங்களுக்கு நானே எடுத்து தருகின்றேன். திலீபன் அண்ணாவின் இதிருவுருவப்படம். 2018 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2018 செப்ரம்பர் மாதம் வரை ஒரு திருவுருவப்படம் வைக்கப்பட்டது. 2018 ஆண்டு நினைவேந்தலுக்காக முதல் இருந்த திருவுருவப்படம் அகற்றப்பட்டு வேறு ஒரு திருவுருவப்படம் வைக்கப்பட்டது. அதன் பிறகு 2019 ஆண்டு நினைவேந்தலுக்காகவும் நிரந்தரமாகவே பழுதடையாமல் இவ் விடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் திலீபன் அண்ணாவின திருவுருவப்படம் அமைக்கப்பட்டு அவ் விடத்தில் வைக்கப்பட்டது. திலீபன் அண்ணாவின் எப்படம்  திருவுருவப்படமாக வரபோகின்றது என்றோ அல்லது அது எவ்வாறு அமைக்கப்பட்ட போகின்றதோ என்றோ யாருக்கும் தெரியாது அவ் விடத்தில் திருவுருவப்படம் வைக்கப்பட்டுகின்ற போதே அனைவருக்கும் தெரியும். அதற்கான பணத்தினை ரவி எனக்கு வழங்கியும் இருந்தான். 

என்னுடைய கேள்வி இன்று வளைவை கழட்டி தூக்கி எறிந்து விட்டு புது வளைவு போட்டு இருக்கின்றார்கள் என்று கேட்கின்ற ஒரு சிலர் திலீபன் அண்ணாவின் படம் 2019 இல் தூக்கி விட்டார்கள் என்று பதிவும் செய்திருக்க வேண்டும் ஏன் நீங்கள் அப்பதிவினை மேற்கொள்ளவில்லை என்பதற்கான காரணத்தை நான் அறியேன். நீங்கள் கழட்டி எறிந்து விட்டதாக கூறிய வளைவு தற்போதும் அதே இடத்தில் தான் உள்ளது. ஆனால் அந்த இடத்தில் இருந்து அகற்றப்படட பழைய திலீபன் அண்ணாவின் திருவுருப்படங்கள் எங்கு உள்ளது ஏன் அகற்றினீர்கள் என்று கேள்வி கேட்டு பதிவிட்டீர்களா? அதை ஏன் நீங்கள் செய்யவில்லை. 

உங்களிடம் அன்பாகவும் பண்பாகவும் வேண்டிக்கொள்ளுகின்றேன் உங்களுக்கு பிடிக்காதவர்களை நீங்கள் விமர்சனம் செய்யுங்கள் அது தவறில்லை. அது உங்களுடைய உரிமை.  ஆனால் அந்த விமர்சனத்தை செய்வதற்குரிய கருவியாக இவ் திலீபன் நினைவாலயத்தினை ஆக்காதீர்கள். எனக்கு மிக வருத்தம் அளித்தது எல்லாம் தெரிந்த பல உதவிகளைச் செய்த ரவி கூட விமர்சனம் செய்தது தான். நான் இதில் எதற்கும் உரிமை கோரப்போவதில்லை அந்த அளவுக்கு சிறுமைத்தனமான ஆளாக நான் இருக்க போவதில்லை. தமிழ்இனத்தின் சொத்தை யாருமே எம்போதுமே உரிமை கொண்டாட முடியாது. இச்சொத்தினை மெருகூட்டுகின்ற செழிப்படுத்துகின்ற ஒரு சிறு தொண்டனாகவே இருக்கலாமே ஒழிய அதை நாமே செய்வேன் என்றும் நீங்கள் செய்ய கூடாது என்றும் கூறுகின்ற அதிகார தரப்பாக யாரும் இருத்தல் கூடாது. 

கண்ணுக்குத் தெரியாத அந்த இறைவனுக்காக அவன் சந்நிதானத்தில் ஒவ்வொருவரும் தன்னுடைய ஆத்ம திருப்திக்கு செய்வது போல் எமக்காக உயிர்துறந்த கண்ணுக்கு தெரிந்த திலீபன் சந்நிதானத்தில் ஆத்ம ஈடேற்றத்திற்காக அதன் புனிதம் கெடாமல் எதையும் செய்யாலாம் என்ற நிலையே சிறப்பானது. தேவையுமானது. 

நானா நீயா என்று போட்டி போடுவதற்கு உரிய இடம் இல்லை இன்று வீரம் உணர்ச்சி கொள்கை தியாகம் என்று பேசி பொங்கி எழுகின்ற நானும் நீங்களும் தமிழ் இனவிடுதலைப் போராட்டத்தில் இளைஞர்களும் யுவதிகளிகளும் தங்கள் இளமைக்கால கனவுகளை எல்லாம் வெட்டி எறிந்து விட்டு தங்களை அர்பணித்து தியாகத்தோடு போராடிய போது பேசாமல் இருந்தவர்கள்தான். எல்லைகளில் எங்களடைய அண்ணாக்களும் அக்காக்களும் தம்பிகளும் தங்கைகளும் கண்விழித்து பாதுகாத்த போது பஞ்சுமெத்தைகளில் கண்மூடி உறங்கியவர்கள். திலீபன் அண்ணா பசியுடன் தமிழருக்காக தியாக வேள்வி நடாத்திய போது உணவருந்தி விட்டு வந்து அந்த மேடையில் திலீபன் என்கின்ற இளைஞன் எமக்காய் பசியால் துடித்த போது பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நாம். 

அவர்கள் உயிர் கொடுத்து வாழவைத்த தமிழ்த்தேசியத்தையே அன்று அவர்களுடன் தோல் கொடுத்து அதை கொண்டு செல்லாமல் இருந்து விட்டு இன்று வாhத்தைகளால் பேசிக்கொண்டிருக்கின்றோம். நாம் செய்த தந்த தவறினைதான் விட்டு விடுவோம். ஆனால் இன்று தமிழனுக்கு தன் பசிதீயினால் முகவரி தந்த இடத்தின் நிகழ்வுகளை சிறுமைத்தனமாக விர்சிக்கின்றோம். கருத்தாடல் செயகின்றோம். நானா நீயா என்று போட்டி போடுகின்றோம். 

கடந்த காலங்களிலும் என்னுடை மனம் எண்ணம்போல் தான் சில பணிகளினைச் செய்தேன் அவ்வாறே இவ்வருடமும் செய்கின்றேன் கடந்த வருடங்களில் விமர்சிக்கப்படாதவை இன்று விமர்சிக்கப்படாமைக்கான காரணம் நான் அறியேன் அதற்காக கடமைகளையும் எண்ணங்களையும் மறந்து போவதும் செயல் வடிவம் கொடுக்காமல் ஒத்தி வைப்பதும் ஏற்புடையது அல்ல. இன்னும் ஒரு சில பணிகள் உள்ளன அதையும் நிறைவு செய்வதோடு என் பணி முடிவுறும். அந்த புனிதமான இடத்தில் அதன் புனித தன்மையை தகர்க்கும் விதத்தில் நான் என்றும் செயற்பட்டது இல்லை. அவ்வாறு செயற்பட்டதாக நீங்கள் நினைத்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் திலீபன் அண்ணாவின் உயிர் மூச்சான வாக்கியம் அந்த மக்கள் புரட்சியின் அடிப்படையே ஒற்றுமை. அதற்காக தன்னைத் தியாகம் செய்த திலீபன் அண்ணாவின் நினைவேந்தலைக்கூட ஒற்றுமையாக செய்ய முடியாத நாங்கள் எவ்வாறு அவரின் சித்தாந்தமான மக்கள் புரட்சியை ஏற்படுத்த போகின்றோம். இது மக்களை நோக்கிய கேள்வி அல்ல.........

வ.பார்த்தீபன்
யாழ் மாநகரசபை உறுப்பினர்
முகநூல் பதிவு

No comments