சிங்கள தேசத்திற்கு பதவி:தமிழர்களிற்கோ விசாரணைகள்?


ஜநாவில் இலங்கையினை காப்பாற்றி வந்திருந்த பேராசிரியர் பாலித கோஹனவுக்கு கோத்தா சிறப்பு பரிசில் வழங்கியுள்ளார்.அவர் சீனாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளதுடன்,  ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியாகவும் இருந்திருக்கின்றார்.

நல்லாட்சி காலத்தில் இனஅழிப்பு அரசை காப்பாற்றிய அவருக்கு கோத்தா அரசு தனது வெகுமதியை வழங்கியுள்ளது.

இந்நிலையில் மறுபுறம் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினரும் விளக்கமறியல் கைதியுமான பிள்ளையான் எனும் சந்திரகாந்தன் இன்று (07) இரண்டாவது முறையாக முன்னிலையாகியுள்ளார்.


இதேவேளை முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் இந்த விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர்.


No comments