மணிவண்ணன் இடை நிறுத்தம்! பெயரைப் பயன்படுத்த முடியாது! கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நிலையிலிருந்து மணிவண்ணனை இடை நீக்கம் செய்துள்ளதாக அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

இன்று கட்சியின் தலைச் செயலகத்தில் நடத்திய ஊடகச் சத்திப்பிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். 

அவர் தெரிவித்த கருத்துக்களின் முக்கியமான சில பகுதிகளை இங்கே:-

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நிலையிலிருந்து மணிவண்ணனை இடை நீக்கம் செய்துள்ளோம். அவர் இன்று முதல் தமிழ்த் தேசிய முன்னணி என்ற பெயரை பயன்படுத்த முடியாது. இது தொடர்பில் இன்று மின்னஞ்சல் மூலமாகவும் பதிவுத்தபால் மூலமாகவும் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.