சுமந்திரன் மேடைக்கும் தேசிய தலைவர் தேவை?

தற்போதைய தோல்வி தமிழரசுக்கட்சிக்கு இடித்துரைத்த செய்தியை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார் கேசவன் சயந்தன்.

சுமந்திரனின் ஆயிரம் பேருக்கான அன்னதான நிகழ்வு இன்று சிறுப்பிட்டியில் நடைபெற்ற போதே அங்கு கலந்து கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு இதுவரை செய்து வந்திராத சலுகை அரசியல் பற்றி பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட சயந்தன் மாவையினை சிலாகித்து பேசிய போது மக்கள் கைதட்டி ஆரவாரித்தனர்.

நாம் எமக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்ககூடாதென தெரிவித்ததுடன் விருப்பு வாக்கிற்காக அடிபடவேண்டாமென மக்கள் கோருவது வெட்கத்தை தருவதாகவும் தெரிவித்தார். 

தேசிய தலைவர் அடிக்கடி கூறுவது போல பாதை நெடியது ஆனாலும் இலட்சிய தடம் மாறாது பயணிக்க அழைப்பும் விடுத்துள்ளார்.


No comments