கல்குடா விபத்து! இளைஞர் பலி!

கல்குடா கும்புறமூலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் படுகாயமுற்ற நிலையில் வாழைச்சேனை

ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.

கிரான் பிரதேசத்தை சேர்ந்த அருமைத்துரை கிருஷாந் (வயது 21) என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் கருவாக்கேணி பிரதேசத்தை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை சிவநேசராஜா (வயது 48) என்பவரே காயமடைந்தவராவார்.

கும்புறுமூலை, பாசிக்குடா வீதியில் நேற்று (22) இரவு ஒன்றன் பின் ஒன்றாக சென்ற மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியுமே மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக கல்குடா காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments