இலங்கையில் 13வது கொரோனா மரணம்!


இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் என்றும், கப்பல் மாலுமி  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைனில் இருந்து கடந்த 02 ஆம் திகதி வந்த குறித்த நபர் சிலாபம், அம்பகஹவில தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த நபர் செப்டம்பர் 9 ஆம் திகதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments