கனடாவில் படகு விபத்து! வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் பலி! மேலும் 6 பேர் காயம்!

கனடா டொரொன்டோவில் அமைந்துள்ள வூட்பைன் கடற்கரையில் ஏற்பட்ட படகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் வூட்பைன் கடற்கரையில் படகு ஒன்றில் 6 பயணிகளுடன் இருந்த படகு கட்டுப்பாட்டை இழந்தால் கரையிலிருந்து 90 மீற்றர் தூரத்தில் இருந்த பாறையுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

பயணிகளில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அங்கு கிசிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை தீருவிலையைச் சேர்ந்த 46 வயதான இலங்கைகோண் பல்லவநம்பி என்று தெரிய வந்துள்ளது.

படகோட்டி உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். மற்றைய மூன்று பேருக்கும் சம்பவ இடத்தில் சிகிற்சை பெற்றிருந்தனர்.

கடற்கறையில் கடமையாற்றும் உயிர்காக்கும் காப்பாளர்கள் விரைவாகச் செயற்பட்டு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருந்தனர்.

படகு வேகமாகச் சென்று பறையில் மோதியுள்ளதை சிபி 24 ஊடகத்தால் வெளியிடப்பட்ட காணொளி காட்டுகின்றது. 

பயணிகள் ஏன் உயிரிகாக்கும் அங்கிகளை அணிந்தார்களா என்பது புலனாகவில்லை. படகு பறையுடன் மோதியதில் பயணிகள் தூக்கி எறியப்பட்டிருக்கிலாம் என நம்பப்படுகின்றது.

கடற்கரையில் இருந்தவர்களையும், சம்பவத்தைப் பார்த்தவர்களையும் அல்லது விபத்து நடந்த வீடியோ காட்சிகளைக் கொண்டிருக்கக்கூடியவர்களையும் புலனாய்வாளர்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் வலியுறுத்துகின்றனர்.

இறுதியாகக் கிடைக்கப்பெற்ற தகவலின்படி படகில் பயணித்தவர்கள் அனைவரும் தமிழர்கள் எனத் தெரியவந்துள்ளது.

No comments