சர்வதேச சேவையை சேர்ந்த தமிழர் மரணம்?


தென்னாபிரிக்காவில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தில் பணியாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அதிகாரி உயிரிழந்துவிட்டதாக அவரின் உறவுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த யோகநாதன் ( வயது 40 ) என்பவரே உயிரிழந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவர் உயிரிழந்தமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தென்னாபிரிக்க தூதரகத்தின் உதவி இயக்குனராக கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் பணியாற்றி வருகிறார்.இந்தப்பதவிக்கு முன்னர் அவர் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
No comments