மணப்பெண் தேடி மீண்டும் யாழ்.வந்தார் மகிதானந்தா?

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த யாழ்ப்பாணத்திலும் ஒரு திருமணத்தை செய்யவுள்ளதாக மணமகள் தேடிய மகிதானந்த அழுத்கமகே மீண்டும்

யாழ்.வந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சருக்கு மற்றொரு அமைச்சரான டக்ளஸ் யாழ்ப்பாணத்து முந்திரிகை பழங்களை காண்பித்துள்ளார்.

தற்போது யாழ்ப்பாணத்திற்கு கூடிய அளவில் அமைச்சர்களை தருவிப்பதென்ற போட்டியின் தொடர்ச்சியாக இன்று விவசாய அமைச்சர்  மகிதானந்த அழுத்கமகேயினை ட்களஸ் அழைத்து வந்திருந்தார்.


ஆனாலும் அவரால் நடத்தப்பட்ட கூட்டத்தில் அங்கயன், முன்னாள் வடக்கு ஆளுநரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் என பலரும் பங்கெடுத்திருந்தனர்.

2012ம் ஆண்டு காலப்பகுதியில் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த மகிதானந்த அழுத்கமகே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த தான் யாழிலும் ஒரு திருமணம் செய்யவுள்ளதாக தெரிவத்த கருத்து சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments