பதுளை குளத்தில் சடலம் மீட்பு

பதுளை தெமோதரை சௌதம் தோட்டம் 5ஆம் கட்டையில் அமைந்துள்ள குளத்தில் மிதந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குளத்தில் சடலம் மிதந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர்

உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த 74 வயதையுடைய பெரியம்மன்பெரியான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் உடற்கூறு ஆய்வுகளுக்காக துளை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளது.


No comments