யாழில் தொடரும் வாகன விபத்து?

வடக்கில் வாகன விபத்துக்கள் சாதாரணமாகியிருக்கின்ற நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை தினத்திலும் விபத்துக்கள் அரங்கேறியுள்ளது.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது மோதிய பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கார் முற்றாக சேதமடைந்துள்ளது.

அதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஆம்புலன்ஸ் வண்டி யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து பருத்தித்துறை நோக்கி வரும்பொழுது இமையாணன் பகுதியில் விபத்திற்குள்ளாக்கியுள்ளது.

வீதியில் வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் அமைக்கப்பட்ட மைல்  கல்லை உடைத்து அருகில் இருந்த கடைத்தொகுதி ஒரு பகுதியை மோதியுள்ளது. அம்புலன்ஸ் வண்டியின் முன்பக்கம் உடைந்து பெரும் சேதத்துக்கு உள்ளாகிய நிலையில் காணப்படுகின்றது.


No comments