வெள்ளையடிக்க ஆலாய் பறக்கிறார் சுமா?


முறைகேடுகளால் வென்றதாக கூறிக்கொண்ட எம்.ஏ.சுமந்திரன் அந்த பழியிலிருந்து மீள படாதபாடுகின்றார்.

சாதாரண மக்களை பொறுத்த வரையில் எம்.ஏ.சுமந்திரனின் வெற்றியென்பது மோசடி மிக்கதென்ற மைய கருத்து ஊன்றியுள்ளது.

ஆனாலும் தான் தேர்தலில்; நேர்மையாக வென்றதாக காண்பிக்கும் தேவை அவருக்கு நிரம்பவே உள்ளது.அதிலும் அவருடன் கூட இணைந்து செயற்பட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கூட சுமந்திரனின் வெற்றி பற்றி வினவினால் விசம சிரிப்பு சிரிக்கின்றனர்.


இந்நிலையில் தனது வடமராட்சி அலுவலகம் முதல் ஒவ்வொரு அலுவலகமாக மீள உயிரூட்டி பிரச்சாரங்களை அவர் முடுக்கிவிட்டுள்ளார்.

ஓருபுறம் முன்னணி உள்ளக குடுமிப்பிடி சண்டையில் உச்சமடைந்திருக்க கூட்டணியோ இப்போது தான் சோம்பல் முறிக்கிறது.இத்தகைய சூழலில் கிடைத்த இடைவெளியை தக்க வைக்க சுமந்திரன் மும்முரமாகியுள்ளார்.

இதனிடையே கடந்த தேர்தலிலே தன்னோடு நின்று துணை செய்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை நேற்று மாலை எம். ஏ. சுமந்திரன் யாழ் சிறுப்பிட்டியில் சந்தித்து நன்றி தெரிவித்ததாக அவரது முகநூல் தெரிவித்துள்ளது.


நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோரும் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும், ஆதரவாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments