வாகரையில் குளத்தில் வீழ்ந்து சிறுமி பலி!

மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் சிறுமி ஒருவர் குளத்தில் தவறி வீழ்ந்ததில் உயிரிந்துள்ளார். 

உயிரிழந்தவர் குகனேசபுரம் ஆலம்குளத்தினை சேர்ந்த ச.விஜயரூபினி,  12 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி சகோதரியுடன் குளக்கட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது,  கால் தவறி குளத்தின் உள்பகுதியில் வீழ்ந்ததால் அச்சிறுமி நீரில் மூழ்கிய நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோதும் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடலம் உடற்கூறு விசாரணைக்காக மருத்துவமனை வைக்கப்பட்டுள்ளது. 

கணவனால் கைவிடப்பட்ட நிலையில் மூன்று குழந்தைகளுடன் தயார் வாழ்ந்து வந்துள்ளார். தயார் ஆடு மேய்க்கும் கூலித்தொழில் கிடைக்கும் வருமானத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள நிலையில்  பிள்ளையின் உடலை அடக்கம் செய்ய போதுமான பொருளாதார வசதி இன்றை கேள்விக்குறியாக உள்ளது என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

No comments