காணாமல் போனோர் விவகாரத்தில் அரசியல் செய்ய தடை?


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு என்ற பெயரை அரசியல் கட்சிகள் பயன்படுத்த கூடாதென வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு மாகாணத்திற்கான இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 30 ம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினம் அன்று கிளிநொச்சியில் எம்மால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மாபெரும் மக்கள் எழிச்சி பேரணியை கட்சி ஒன்று குழப்பும் நோக்கோடு செயற்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆகஸ்ட் 30 திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பினால் கிளிநொச்சியிலும், திருகோணமலையிலும் போராட்டம் செய்வதற்கு உத்தியோகபூர்வமாக எமது அமைப்பு அறிவித்து இருந்தது.

ஆனால் அது திட்டமிட்டு குழப்பப்பட்டுள்ளது.

எவரும் ‘காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் கண்ணீரில் குளிர் காய தேவையில்லை உடனடியாக ஒதுங்க வேண்டும். 

எங்கள் அமைப்பில் இருந்து நான்கு மாதத்துக்கு முன்பு வெளியே கலைக்கப்பட்ட இருவரை திடீரென்று அழைத்து யாழ் சங்கிலியன் பூங்காவிலும் முல்லைத்தீவிலும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இனிவருங்காலங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பு என்ற பெயரில் ஒன்று இனி நடக்குமாக இருந்தால் அவர்களிற்கும் அவர்கள் கட்சிக்கும் எதிராக நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை எந்தவொரு அரசியல் வாதிகளும் கட்சி அரசியல் ஆக்க வேண்டாம் எனவும் அவர் கோரியுள்ளார்.


No comments