டெலோவிலும் விந்தனிற்கு அல்வா?


நெருக்கடியான சூழலில் பணியாற்றிய சகபாடிகளை துரோகிகள் ஆக்குவதும் கைவிடுவதும் தமிழ் அரசியல் பரப்பில் சாதாரணமாகியுள்ள நிலையில்

டெலோவும் தன்பங்கிற்கு விந்தன் கனகரட்ணத்தை கைவிட்டுள்ளது.

ஏற்கனவே தனது பினாமி சுரேன் குருசாமியை களமிறக்க செல்வம் அடைக்கலநாதன் முற்பட சிறீகாந்தா-சிவாஜி தரப்பு வெளியேறி தனிக்கட்சியை ஆரம்பித்தனர்.

ஆனாலும் நெருக்கடிகள் மத்தியில் கட்சியை கட்டிக்காத்த விந்தன் கனகரட்ணம் அமைதி காத்து வந்த போதும் அவருக்கு மாகாணசபையில் இடம் வழங்கப்படுமென ஆறுதல் கூறி சுரேன் குருசாமி களமிறக்கப்பட்டார்.

எனினும் அவர் எம்.ஏ.சுமந்திரனுடன் ஒட்டித்திரிவதால் வெற்றி பெற கனவு கண்ட போதும் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில் மாகாணசபை தேர்தல் கனவில் தற்போதுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் கைவிடப்பட்ட விந்தன் கனகரட்ணத்தை கைவிட்டு கட்சியுடன் 2019 பின்னராக இணைந்த கும்பல் சகிதம் டெலோவை வளர்க்க தலைமை முற்பட்டுள்ளது.


No comments