கூடுகின்றது நாடாளுமன்று:சஜித் தலைமையில் போராட்டம்?நாடாளுமன்றம் இன்று ( 08) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ளது.

செப்டெம்பர் மாதத்துக்கான முதலாவது சபையமர்வு பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, இன்று மாலை சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

மாதுலுவாவே சோபித்த தேரரின் உருவச் சிலைக்கு முன்பாக, இந்த சத்தியாகிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


No comments