சந்நிதியில் உண்ணாவிரதம்:திங்கள் கடையடைப்பு!


தியாகி திலீபன் நினைவேந்தலிற்கு யாழ்.நீதிவான நியாயதிக்க எல்லைக்குள் இலங்கை நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் எதிர்வரும் 26ம் திகதி யாழ் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அடுத்து வரும் 28ம் திகதி திங்கட்கிழமை வடகிழக்கில் பூரண கர்த்தாலுக்கும் தமிழ் கட்சிகளால் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோத்தாவின் நல்லெண்ணமாக விலக்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்ட திலீபன் நினைவேந்தல் தடையுத்தரவு யாழ்.நீதிமன்றால் மேலும் 14 நாட்கள் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஜனநாயக ரீதியில் நினைவேந்தலை செய்யமுடியுமென்ற தமிழ் தரப்புக்களது கனவு பொய்த்துப்போயுள்ளது.

இதனிடையே இன்று அவசரமாக கூடிய தமிழ் தரப்புக்கள் தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் கூடி ஆராய்ந்து இதனை ஊடகங்களிற்கு அறிவித்துள்ளன.


No comments