கண்ணுள் எண்ணெய் விட்டவாறு ஆமி!தியாக தீபம் திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, நினைவேந்தல் தடைக்கு எதிராக்தை கவனயீர்ப்புக்களை முன்னெடுக்க தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் தரப்புக்கள் முயலலாமென்ற எதிர்பார்ப்பில் இலங்கை படைகள் எங்கெணும் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக முன்னதாக உண்ணாவிரதம் இருக்க தீர்மானிக்கப்பட்ட செல்வச்சந்நிதி ஆலயம் இராணுவ முற்றுகைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோன்று தீருவில்,வல்வெட்டித்துறை,பருத்தித்துறை எங்கும் இரவு பகலாக படையினர் நிலை கொள்ள வைக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை நீதிமன்றத்தினால் குறித்த ஆலயத்தில் போராட்டம் மேற்கொள்ள மட்டுமே தடை விதிக்கட்டிருந்த நிலையில் இன்று (26) அதிகாலை முதல் சந்நிதி ஆலயத்திற்கு செல்லும் 3 பிரதான வீதிகளையும் மூடியுள்ள இராணுவத்தினர் வழிபாட்டிற்காகக் கூட எவரையும் அனுமதிக்காது விரட்டியடித்தனர்.

நேற்று இரவு முதல் குறித்த வீதிகளில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை முதல் முற்று முழுதான இராணுவ முற்றுகைக்குள் சந்நிதியான் ஆலய சூழல் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேபோன்றே நல்லூர் மற்றும் விடுதலைப்புலிகளது நிiவு சின்ன பகுதிகள் எங்கெணும் படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.


No comments