சும்மா இருக்காத சிங்கள இராணுவம்: மூவர் கைது?

வடகிழக்கில் காட்டிவந்த தமது கைங்கரியத்தை தெற்கில் முன்னெடுக்க முற்பட்ட இலங்கை இராணுவ சிப்பாய்கள் அகப்பட்டுள்ளனர்.

இளம் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்க முயன்ற இலங்கை இராணுவ சிப்பாய்கள்; மூன்று பேர் கொஹ_வல பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொஹ_வல இராணுவ முகாமில் பணியாற்றிய ஒரு கோப்ரல் மற்றும் இரண்டு லான்ஸ் கோப்ரல் தரத்தையுடையவர்கள் நேற்று கொஹ_வல நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை செப்டம்பர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கொஹ_வல, ஜம்புகஸ்முல்லவில் வியாழக்கிழமை இரவு மூன்று சந்தேக நபர்களும் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். சம்பவ இடத்திற்கு பெண்ணின் கணவர் வந்துவிட, அங்கு முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

மாறி மாறி ஆட்சி கதிரையேறும் சிங்கள அரசுகள் படைகளை வடக்கு கிழக்கில் தங்க வைக்க முற்பட அவர்களது மனைவியர் தென்னிலங்கையில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதான குற்றச்சாட்டுக்கள் வலுத்துவருகின்றது.


No comments