மன்னாரில் ஆய்வு?


மன்னார் நானாட்டான் பகுதியில் அண்மையில் 18.09.2020 அன்று குறித்த தனியார் காணி ஒன்றில் அத்திவாரம் வெட்டும் போது 1902 நாணயங்கள் கண்டு பிடிக்கப்பட்டன அவ் இடத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஸ்ட பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், ப.கபிலன் யாழ்ப்பாண கோட்டை புனர்நிர்மான உத்தியோகத்தர், வி.மணிமாறன் யாழ் கோட்டை அகழ்வாய்வு உத்தியோகத்தர், தொல்லியல்துறை பட்டதாரி மாணவர்கள் ச.தசிந்தன், க.கிரிகரன் ஆகியோர் தொல்லியல் கள ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்


இவ் தொல்லியல் களஆய்வு சில நாணயங்கள் கண்டு பிடிக்கப்பட்டதுடன் அவற்றினை ஆராய்ந்த பேராசிரியர் இதேபோல் நாணயங்கள் எமக்கு ஏற்கனவே கிடைக்கப் பெற்றதாகவும் இவ் நாணயத்தின் தொன்மை புதியதொரு வெளிச்சத்தை வன்னிப்பிராந்தியத்தில் ஏற்படுத்தும் எனக்கூறினார் இது பற்றி மிக விரைவில் ஆதார பூர்வமான தகவல்களை கட்டுரையில் வெளிப்படுத்துவதாகவும் கூறினார்


இக்கள ஆய்வு மையத்திற்கு வந்த பாராளுமன்றம் உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நானாட்டான் பிரதேச செயலகர் மா.சிறீஸ்கந்தகுமார் மற்றும் நானாட்டான் உபதவிசாளர் ஜொனி உறுப்பினர்கள் புவணம் மற்றும் மதகுரு அருண் புஷ்பராஜ் கிராமவாசிகளான செல்வம், கணேஸ், ஜெயசீலன் ஆகியோர் இதன் தொன்மை பற்றி பேராசிரியரிடம் கேட்டறிந்து கொண்டனர்




பின்னர் நானாட்டான் பிரதேச செயலகர் மா.சிறீஸ்கந்தகுமார் அவர்களின் அழைப்பில் வரலாற்று தொல்லியல் எச்சங்கள் காணப்படும் நொச்சிக்குளம், பல்லன்கோட்டை, சாலம்பன், இராமடு, அருவியாற்றின் கரையோரப் பகுதிகள் ஆகிய தொல்லியல் எச்சங்கள் காணப்படும் மையங்களை பிரதேச செயலகரின் உதவியுடன் கள ஆய்வு செய்தனர்.

No comments