புலம்பு ராசா நீ புலம்பு?


தமிழர் பகுதிகள் எங்கும் முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில், அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடும் தொனியில் தனது முகநூலில் காணொளி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார்.

அரசின் அடக்குமுறைகளை கண்டித்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் பகுதிகளில் இன்றைய தினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில் வடக்கு கிழக்கில் முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் வெளியிட்டுள்ள காணொளியில்,

இன்றைய தினம் ஹர்த்தால் என அறிவிக்கப்பட்டுள்ளது, அதனால் கிழக்கில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன, இவர்கள் நாளைய தினம் கடைகளைத் திறந்தால் நான் வந்து கேட்பேன் நேற்றைய தினம் ஏன் திறக்கவில்லை என்று.

இதற்கு எல்லாம் யார் காரணம், அரசாங்கம் இது தொடர்பில் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை, இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்று தெரியும். இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டால், அவர்கள் தாயகம் கேட்பதற்கு சமம்.

இது தொடர்பில் அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் அந்த காணொளிப் பதிவில் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments