மீண்டும் கொரோனா எச்சரிக்கை?

 

சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங் காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும் என்று இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.

நாட்டில் சமூகத்தினுள் கொவிட் -19 வைரஸ்d தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பெரும்பாலானவர்கள் தொற்றுக்குள்ளாகின்றனர்.

எனினும் சமூகத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்படாவிட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


உற்சவங்கள் நடத்தப்படும்போதும் பொறுப்பற்று செயற்படுவதாக எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தனிமைப்படுத்தல் நிலையங்களாக உள்ள ஹோட்டல்களிலுள்ள ஊழியர்களும் சுகாதார பாதுகாப்புடன் பொறுப்பாக செயற்பட வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.


No comments