கோத்தாவிற்கு ஒரு கடிதம்?

 தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிக்கும் உரிமைக்கான தடையை நீக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ்த் தேசியம் சார்ந்து இயங்குகின்ற அனைத்து தமிழ்க் கட்சிகளும் இன்று (19) சற்றுமுன் கையெழுத்திட்டுள்ளன.


இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு, (இலங்கை தமிழ் அரசு கட்சி, ப்ளொட்,) தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஈழ தமிழர் சுயாட்சி கழகம், தமிழ் தேசிய பசுமை இயக்கம் என்பன கையெழுத்திட்டுள்ளன.


திலீபன் உட்பட விடுதலைப் போரில் உயிர் நீத்தவர்களை நினைவுகூறுவதற்கான தடையை இலங்கை அரசாங்கம் விலக்க வேண்டும் என நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டதில் தீர்மானிக்கப்பட்டது.
No comments