கூட்டமைப்பின் பேச்சாளர் சாணக்கியன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு கூட்டமைப்பின் பேச்சளார் பதவி

வழங்கப்படவுள்ளது.

நேற்றைய தினம் நாடாளுமன்றில், சபாநாயகர் குழுவில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அமர்வில் பிரசன்னமாகாத சந்தர்ப்பத்தில் அவையை கொண்டு நடத்தும் பொறுப்பு இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டிருந்தது.

தனது நாடாளுமன்ற கன்னி உரையில் நாடாளுமன்றத்தில் மும்மொழியிலும் உரையாற்றிய இரா.சாணக்கியன் பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தார். குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற இரா.சாணக்கியனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை தமிழரசுக்குள் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் சுமந்திரன் வசம் அது இருப்பதை பங்காளிகள் விரும்பாத நிலையில் தற்போது சம்பந்தனின் ஆசீர்வாதத்துடன் சாணக்கியனிற்கு வழங்கும் காய் நகர்த்தல்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.


No comments