நாவற்குழிக்கு பெரிதாக வருகின்றார் புத்தர்?

மகிந்தவை பாராட்டி நாவற்குழியிலிருந்து மறவன்புலோ சச்சிதானந்தன் கடிதமெழுத அவரது ஊரிலோ சிங்கள ஆக்கிரமிப்பு மும்முரமடைந்துள்ளது.

ஏற்கனவே பாரிய விகாரையினை அமைத்துள்ள சிங்கள தேசம் தற்போது புதிய கட்டுமானங்களை முன்னெடுத்துள்ளது.

யாழ் கைதடி நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள விசாரைக்கு சொந்தமான காணியில் பௌத்தமத அடையாளத்தை  நிறுவும் நோக்கில் அடிக்கல் சாட்டப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இன்று புதன்கிழமை காலை விகாரை அமைந்துள்ள காணி பகுதியில் பௌத்த மதம் தொடர்பான நிகழ்வுகளை நடத்தும் நோக்கில் கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்காக பௌத்த பிக்கு மற்றும் போலீசார் ராணுவத்தினர் பங்குபற்றுதலுடன் குறித்த அடிக்கல் நாட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments