கூடி கூடி கலைந்து போவோமா?

 


தியாகி திலீபனின் நினைவேந்தலை நடத்த விதிக்கப்பட்ட தடைகளை அரசு

விலக்கிக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் இன்று மீண்டும் ஒன்று கூடி ஆராய்ந்துள்ளன.

தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையை தடுக்கும் கோட்டாபய அரசின் நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ள, வழங்கப்பட்ட 3 நாள் அவகாசம் இன்றுடன் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராய இன்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் இன்று ஒன்று கூடினர்.

நாளை யாழ்ப்பாண நீதிமன்றம் தடை தொடர்பிலான தனது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளது.

நாளைய தீர்ப்பு தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்கும் விதமாக அமைந்தால் என்ன செய்வது, எப்படியான நகர்வை மேற்கொள்வது என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

ஆயினும் ஊடகங்களிற்கு இன்றைய சந்திபபில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

நீதிமன்று நிiவேந்தல் தடையினை விலக்கிக்கொள்ள மறுத்தால் ஆர்ப்பாட்ட போராட்டம் அல்லது கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments