அபிவிருத்தி! ஒட்டுக்குழுத் தலைவருடன் பேச்சு!


வடக்கு கிழக்கு உட்பட நாடாளாவிய ரீதியில் பரந்து காணப்படுகின்ற களப்பு நீர் நிலைகளில நீர் வேளாண்மைய விருத்தி செய்வதற்கு நோர்வே அரசாங்கத்துடன் ஒட்டுக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பேச்சு நடத்தியுள்ளார்.

இலங்கைக்கான நோர்வே தூதுவர் றைன் ஜொனார்லி எஸ்கெண்டல் அவர்கள் இன்று (23.09.2020) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவை மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அமைச்சரின் குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நோர்வே தூதுவர், ஏற்கனவே இலங்கையின் கடற்றொழில் சார் அபிவிருத்தி திட்டங்களுக்கு நோர்வே பெருமளவு நிதியினை செலவிட்டுள்ளதாகவும், எதிர்காலத்திலும் அமைச்சர் கேட்டுக் கொண்டதைப் போன்று தொழில் நுட்ப உதவி உட்பட்ட உதவிகளை வழங்குவததோடு அனுபவங்களை தொடர்ந்தும் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாவும் தெரிவித்துள்ளார்.

நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்துடனும் இணைந்து செயற்பட நோர்வே அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் நோர்வேயில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்ற மீன்பிடிப் படகுகளை உருவாக்குதல் மற்றும் மீன்களை பழுதடையாமல் பாதுகாத்து பதனிடுதல் மற்றம் களஞ்சிப்படுத்தல் செயற்பாடுகளை இலங்கையில் விருத்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குதவற்கும் நோர்வே ஆர்வமாக இருப்பதாகவும் தெரித்தார்.

அத்துடன், இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் மற்றும் உறவுகள் வலுவடைகின்ற பட்சத்தில் எதிர்காலத்தில் எண்ணெய் வளச் செயற்பாடுகளிலும் நோர்வேயின் பங்களிப்பை இலங்கை பெற்றுக் கொள்வதற்கான சூழல் உருவாகும் என டக்ளஸ் தேவானந்தா நோர்வே தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

No comments