தேசியம் சார்ந்து கட்சிகள் கூட்டிணைவு!


தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு 'தமிழ்த்தேசிய எழுச்சி நடைபயணம்' என்ற பெயரில் நடைபயணமொன்றை மூன்று பிரதான கட்சிகளது இளைஞோர் அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ளன.

இந்த நடைபயணம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியிலிருந்து எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவாலயத்தில் நினைவஞ்சலியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த நடைபயணத்தில் தாயகத்திலுள்ள அனைவரும் இதய சுத்தியுடன் ஒத்துழைப்பு தருவதுடன் தியாக தீபம் திலீபனின் நினைவு அஞ்சலியிலும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


குறித்த நடைபயணத்துக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழ் தேசிய கட்சிகளின் இளையோர் அணியினர் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி,கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் கூட்டணி இளையோர்கள் ஒன்று திரண்டு பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments